முஸ்லிம் காங்கிரஸின் ஓர் அங்கமான மலாய் காங்கிரஸின் அலுவலகத்தை கட்சியின் தலைவர்

Nov 06, 2015

உலக மலாய் அமைப்பின் தலைவரும், மலாக்காவின் முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய செனட்டரும், ஆளும் உம்னோ கட்சியின் பிரதித் தலைவருமான முஹம்மது அலி ருஸ்டாம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஓர் அங்கமான மலாய் காங்கிரஸின் அலுவலகத்தை கட்சியின் தலைவர், அமைச்சர்; ரவூப் ஹக்கீமின் அழைப்பை ஏற்று 'தாருஸ்ஸலாம்' தலைமையகத்தில் இன்று மாலை திறந்து வைத்தனர்.

முஸ்லிம் காங்கிரஸில் உறுப்புரிமை பெற்றுள்ள 5000 மேற்பட்ட இலங்கை மலாய் சமூகத்தினரின் நன்மை கருதி இந்த அலுவலகம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிக்கும், மலேசியாவின் ஆளும் உம்னோ கட்சிக்குமிடையில் நெருங்கிய இருதரப்பு உறவுகள் நிலவிவருவது குறிப்பிடத்தக்கது.

இலங்கை மலாயர்களின் ஆரம்ப கேந்திரத்தளமாக கணிக்கப்படும் கொம்பனித்தெருவில் வசிக்கும் மலாயர்கள் இந்தத்தூதுக்குழுக்களை சந்தித்ததுடன் நாளை வெள்ளிக்கிழமை (06) மாலை கண்டி பேராதெனிய வாடி வீடு கேட்போர் கூடத்தில் கண்டி மாவட்ட மலாயர்களை சந்திப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.