தாருஸ்ஸலாமில்' புணரமைக்கப்பட்ட காரியாலய தொகுதியை ரவூப் ஹக்கீம் திறந்து வைத்தார்

Oct 21, 2015

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்சி தலைமையகமான 'தாருஸ்ஸலாமில்' புணரமைக்கப்பட்ட காரியாலய தொகுதியை கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று மலை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் கட்சியின் செயலாளர் எம்.ரி. ஹஸன் அலி, கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவூத், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.