வன்னி மாவட்டத்தில் சூறாவளி பயணத்தில் ஈடுபட்டு கட்சியின் தலைவர் அமைச்சர் ஹக்கீம்

Jul 20, 2015

வன்னி மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்கு முகமாக பல்வேறு பிரதேசங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக சூறாவளி பயணத்தில் ஈடுபட்டு கட்சியின் தலைவர் அமைச்சர் ஹக்கீம் திங்கள்கிழமை (20) பிற்பகல் 1.15 மணிக்கு காக்கையன்குளம் முஸ்லிம் மகா வித்தியாலய மைதானத்தில் உழங்குவானூர்தியில் வந்திறங்கிய போது மக்களால் வரவேற்று அழைத்துச் செல்லப்பட்டார். அமைச்சர் ஹக்கீம் காக்கையன்குளம், பெரியமடு, அடம்பன் உட்பட பல பிரதேசங்களில் உரையாற்றினார். இரவு எருக்கலம்பிட்டியில் பிரமாண்டமான பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.