பௌத்த மக்கள் மத்தயில் மஹிந்தவிற்கு இன்னும் பாரிய சரிவு

Jul 19, 2015

இறுதியாக வர்த்தக சம்மேளனம் மேற்கொண்ட கணிப்பீட்டின் படி சிங்கள பௌத்த மக்கள் மத்தயில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு இருந்த 53 சதவீதமான ஆதரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாம் முன்னாள் ஜனாதிபதியை பிரதமர் ஆக்கப் போவதில்லையென்றும் அவருக்கு எதிராகப் பேசியதைத் தொடர்ந்தும் 43 வீதமாக திடீரெனக் குறைந்து விட்டது எனத் தெரிவித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் மொத்தமாக பார்க்கும் போது நாட்டின் சகல இன மக்கள் மத்தியிலும் மஹிந்தவிற்கு இன்னும் பாரிய சரிவு ஏற்படப் போவது மிகவும் திட்டவட்டமானது என்றார்.

பாராளுமன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் ஐ.தே.கவில் 1ஆம் இலக்கத்தில் போட்டியிடும் நகர அபிவிருத்திஇ நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும்இ ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம்இ ஞாயிற்றுக்கிழமை (19) பிற்பகல் உடுநுவர தொகுதியில் பொல்வத்தக் கிராமத்தில் தமது அலுவலகமொன்றைத் திறந்து வைத்தபோது பிரதேசத்தில் அங்கு வசிக்கும் சிங்கள மக்களால் விமரிசையான வரவேற்பு அளிக்கப்பட்டது.

20ஆவது அரசியலமைப்புத் திருத்ததைப் பொறுத்தவரை எமது நிலைப்பாட்டை கடுமையான எதிர்த்த அமைச்சர்களான சம்பிக்க ரணவக்கஇ ராஜித சேனாரத்ன போன்றோரும் ஐக்கிய தேசிய முன்னணிக் கூட்டில் தங்களோடு இணைந்நதிருப்பது மிகவும் சாதகமானது என்றும் அமைச்சர் ஹக்கீம் அங்கு கூறினார்.

கண்டி மாவட்டத்தை அபிவிருத்தி செய்யும் பொறுப்பை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தம்மிடம் ஒப்படைத்திருப்பதாகவும் குறிப்பிட்ட அமைச்சர் ஹக்கீம்இ ஒரு பலமான ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியொன்று அமையப்போவதாகவும்இ இறைவன் நாடினால் அந்த அரசாங்கத்தில் தாம் பலம்பொருந்திய அமைச்சராக விளங்குவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டடுத்தாபணத்தின் தலைவர் எம்.எச்.எம்.சல்மான்இ நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் செயலாற்றுப் பணிப்பாளர் மஹிலால் த சில்வா உட்பட பிரமுகர்களும்இ பொது மக்களும் கலந்து கொண்டனர்.