அபிவிருத்தி செயல்திட்டங்களின் கீழ் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் முன்னெடுக்கப்படும்

Jul 19, 2015

நாடளாவிய ரீதியில் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி செயல்திட்டங்களின் கீழ் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் குறித்து மீளாய்வு செய்வதற்கான கூட்டம் செவ்வாய்கிழமை (26) முற்பகல் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் அவரது அமைச்சில் இடம்பெற்றது. இதில் நகர அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை காணி மீட்பு அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் மற்றும் சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் ஆகியவற்றின் உயரதிகாரிகளும் பங்குபற்றினர்.