ஹிங்குரானை சீனிக் கம்பனி உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு

Jul 19, 2015

ஹிங்குரானை சீனிக் கம்பனிக்காக கரும்புச் செய்கையில் ஈடுபடும் உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக சம்பந்தப்பட்ட சகல தரப்பினரையும் உள்ளடக்கிய குழுவொன்றினை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் கே. வேலாயுதனுடன் வியாழக்கிழமை (21) பத்தரமுல்லை அமைச்சில் இடம்பெற்ற கூட்டத்தில் குறிப்பிட்டார்.

இச் சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் எம்.ரி. ஹஸன் அலி பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் பிரதேச செயலாளர்கள் ஹிங்குரானை சீனிக் கம்பனி உயர் அதிகாரிகள் மற்றும் கரும்புச் செய்கை உற்பத்தியாளர்கள் ஆகியோர் பங்குபற்றினர்.