Addressing gender equality

I believe women must be treated equally. I am committed to develop a shared vision and an explicit consensus on gender equality objectives that includes the obstacles of discrimination in opportunities for education, work, career advancement and wages.Meaningful steps towards gender equality include support for women’s networking and organisational capacity and encouragement of women’s advocacy activities in local political and social institutions.

Accountability of government agencies to civil society is critical for making progress towards gender equality.All too often, local women’s organisations have limited capacity to influence development priorities. They need to be mobilised to fulfil their rightful role.

A common tendency is the use of the word “gender” as a synonym for “women”. Men are missing from this narrative! This prevents a genuine focus on gender relations. Gender relations define economic, social and power relations between men and women. We need to learn how these relations influence women’s capacity to participate or benefit from reforms. Another pitfall is the tendency to treat gender mainstreaming as a goal. It is only a strategy for achieving equality between women and men.

பால்நிலை சமத்துவம்

பெண்களும் சமமாக நடாத்தப்பட வேண்டும் என்பதில் நானும் உறுதியாக இருக்கின்றேன். கல்வி, தொழில், பதவி உயர்வு மற்றும் ஊதியம் போன்ற சகல விதமான பாரபட்சங்களினையும் இல்லாதொழித்து, பால்நிலை சமத்துவத்தை பேணுவதற்காக நான் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றேன். உள்ளூர் அரசியல் நிறுவனங்களில் பெண்களுக்கான வலையமைப்புக்களை ஏற்படுத்தல், நிறுவன இயலுமைகளை அதிகரித்தல் மற்றும் பெண்களை அறிவூட்டும் செயற்பாடுகளுக்கு உதவிகளை வழங்குவதனூடாக அர்த்தமுள்ள பால்நிலை சமத்துவத்தை ஏற்படுத்தலாம். பால்நிலை சமத்துவத்தை முன்னேற்றகரமான பாதைக்கு இட்டுச் செல்வதற்கான கடப்பாடு அரசாங்க நிறுவனங்களுக்கும் சிவில் சமூகத்துக்கும் உரியதாகும். அபிவிருத்தி நடவடிக்கைகளில் பெண்கள் செல்வாக்கு செலுத்துவதற்கான சந்தர்ப்பம் அரிதாகவே காணப்படுகின்றன. பெண்களை அணிதிரட்டி அவர்களின் வகிபாகத்தை உறுதிப்படுத்த வேண்டிய கடப்பாடு எங்களுக்கு உள்ளது. பால்நிலை என்பது பெண்களை மாத்திரம் மையப்படுத்தி நோக்குவது தவறான புரிதலாக உள்ளது. இதனால் இது ஆண்களை ஒதுக்கி நோக்குவதனால் உண்மையான பால்நிலை உறவு ஏற்படுவதை தடுக்கின்றது. ஆண்கள் பெண்களுக்கிடையிலான சமூக, பொருளாதார, அதிகார உறவு முறையே பால்நிலை உறவாக கணிக்கப்படுகின்றது. எனவே நிலையான அபிவிருத்திக்கு ஆண்கள் மற்றும் பெண்களின் பங்கேற்பு இன்றியமையாததாகும்.